சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் .இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகள் குறித்து வங்கியாளர்களின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதில் வங்கியின் அழைப்புகள் சார்பில் வருவது அழைப்பு வருவதுபோல் போலியான குறித்தும், குறுஞ்செய்திகள் அனுப்பி நபர்களிடமிருந்து அதன் மூலம் மோசடிகள் ஏற்படுத்துவது குறித்தும், ஆன்லைன் மோசடிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இவைகள் தொடர்பாக வங்கிகளிடம் புகார் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் வங்கியாளர்களின் குறைதீர்க்கும் முறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, நிதியியல் கல்விக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் (IOB) காரைக்குடி மண்டல மேலாளர் திருமதி லீனா. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.இளவழகன், (SBI) முதன்மை மேலாளர் திரு.எம்.பாஸ்கரன், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் திரு.செல்லத்துரை. நிதியியல் கல்வி ஆலோசகர் திரு.எம்.பிச்சைமணி வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி