விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு குறித்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பா.அசோக் குமார், பேசினார். உதவி ஆய்வாளர்கள் திரு.பிச்சைப்பாண்டி, ஆனந்த ஜோதி, திரு.கலைச்செல்வன் சமுத்திரம் டிரஸ்ட் சட்ட ஆலோசகர் செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், கிரீன் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி