மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான சாலையால் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வாகன கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுமார் 10 இடங்களுக்கு மேல் ஆளை விழுங்கும் பள்ளங்கள் அதிகம் காணப்படுகிறது. பகலில் செல்ல முடியாத நிலையில் வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லும் விவசாயிகள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். சுமார் 22 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆட்சியில் போடப்பட்டுள்ள சாலை தரமற்றதாக உள்ளது. வெறும் மணல்மேடுகளால் சாலை போட்டதால் , தற்போது பெய்த கனமழையின் காரணமாக முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டு விட்டது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து தகுந்த மூலப்பொருட்கள் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும். சோழவந்தான் ரயில்வே பால பணிகள் நடப்பதால், அதிகபட்ச வாகனங்கள் இந்த முள்ளை ஆற்றங்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சோழவந்தான் பகுதியில் செல்ல முக்கியமான சாலையான இந்த பகுதியில் செல்லும் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்வதறியாது,
திகைத்து புலம்பி வருகின்றனர். உடனடியாக, ரோட்டை சீரமைத்து தர கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், சாலையின் அடியில் செல்லும் குடிநீர் பைப் உடைந்து குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால், உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி