மதுரை : மதுரை மாவட்டம், மேற்கு தொகுதி கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமம். இங்குள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் விவசாயக் கூலி வேலையை நம்பி உள்ளனர். பிழைப்புக்காக ,தினசரி மதுரை சென்று சிறிய அளவிலான வேலை பார்த்து வரும் மக்கள் தங்களின் சேமிப்பு மூலம் அரசு கொடுத்துள்ள இலவச மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக.மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கால் உயர் மின்னழுத்தம் காரணமாக இந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் குறிப்பாக டிவி பேன் மிக்ஸி பிரிட்ஜ் டியூப் லைட் போன்றவை சேதம் அடைந்துள்ளது. மேலும் ,தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் மிக்ஸி கிரைண்டர் தொலைக்காட்சி உள்ளிட்ட பொருள்கள் சேதம் ஆகியும் உள்ளதால், இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து, மின்சார வாரிய அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் பார்வையிட்டு, மின்வாரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், தமிழக அரசு தகுந்த மின்மாற்றி மூலம் முறையான மின்சார வசதி செய்து தர வேண்டும். ஏற்கனவே, கிராமங்களில் அதிக அளவில் மின்சார தட்டுப்பாடு உள்ளது. தற்போது ,அடிக்கடி ஏற்படும் உயர் மின் அழுத்தம் காரணமாக மின் பொருள்கள் சேதம் ஆவதால் மின்சாரம் இல்லாத கிராமம் போல் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே, மதுரை மின்வாரிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி