மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் 100- வது வார்டு பகுதியில் உள்ள பிரசன்னா காலனி, காட்டு மாரியம்மன் கோவில் வீதி, புதுத்தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் அடைப்பால் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும், குப்பைகள் அகற்றப்படாமல் காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் அவதியடைகின்றனர். மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், இந்த பகுதியில் பள்ளி வளாகம் அமைந்துள்ளது. சாக்கடையில் அள்ளப்பட்ட குப்பைகள் குவிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் அள்ளப்பட்ட வில்லை, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இதனால், மழைகாலத்தில் குப்பைகளினால் நோய் பரவும் அச்சத்துடனே வந்து செல்லும் நிலை உள்ளது என்கின்றனர்.
பள்ளி அருகில் புதுத்தெருவில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பகுதி தாழ்வாக உள்ளது. இதனால் ,மழைநீர் செல்ல வழியில்லை பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் வழுக்கி கீழே விழும் நிலையில்தான் உள்ளது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் 100 வது வார்டு பகுதியில் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் செல்லவும், குப்பைகளை அகற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். மதுரைக்கு மேயர் வந்தும், பணிகள் தெளிவாக உள்ளதாக, இப்பகுதி மக்கள் முழு முனுத்தனராம்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி