மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் செல்ல பெரும்பாலும் சோழவந்தான் ரயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
மேலும், தினசரி சுமார் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பணிநிமத்தமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளும் சென்று வருகின்றனர். இதனால், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் வருவாயும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் ,20 ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று சென்ற பாண்டியன் முத்துநகர் திருப்பதி போன்ற ரயில்கள் தற்போது நிற்காமல் செல்வதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், இனி வரும் காலங்களில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் நெல்லை எக்ஸ்பிரஸ் திருப்பதி ராமேஸ்வரம் ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சோழவந்தான் பொதுமக்கள் சார்பாகவும் சோழவந்தான் இரயில்பயணிகள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும், ரயில்வே கோட்ட மேலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மாணிக்க மூர்த்தி, கண்ணன், பாலமுருகன், சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி