மதுரை : சோழவந்தான் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமியும் இணைந்து சோழன் உலக சாதனை புத்தகத்தின் 77 வது யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளை மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இந்த போட்டிகளில், பல்வேறு கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் 712 பேர் கலந்து கொண்டனர். விவேகானந்த கல்லூரியின் இளங்கலை மாணவர்கள் கலந்துகொண்டனர். விவேகானந்த கல்லூரியின் இளங்கலை வணிகவியல் மாணவர் குமரகுருபரன் மற்றும் இளங்கலை கணினி அறிவியல் துறை மாணவர்கள் பிரதீப், ஸ்ரீராம் ஆகியோர் நீண்ட நேர யோகா சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று உலக சாதனை படைத்தனர்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற யோகா போட்டிகளில் இளங்கலை கணினி அறிவியல் துறை மாணவர் காமேஷ்குமார் மற்றும் இளங்கலை வரலாற்றுத் துறை மாணவர் மாதேஸ்வரன் பங்கு பெற்று முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்று மெடல் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றனர். இந்தப் போட்டிகளில், பங்கு பெற்ற மாணவர்களை விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் மற்றும் கல்லூரி ஆச்சார்யா செல்வகுமார் ஒருங்கிணைத்தார்கள். சோழன் உலக சாதனை புத்தகத்தின் தலைவர் முனைவர் தங்கதுரை மற்றும் நிறுவனர் ஆசிரியர் முனைவர் நிமலன்நீலமேகம், விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், அகத்தார உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்குமார், முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி