விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் மற்றும் இன்பம் பவுண்டேஷன் சார்பாக நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் விளக்கி பேசினார்.
பள்ளி வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி ஒன்றாம் சட்ட ஆலோசகர் செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ,திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர பொறுப்பாளர் மனோஜ் குமார், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் சரவணன், ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம், முத்துச்சாமி, ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி