சிவகங்கை : பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். தொழில் வளம் பெருகுவதற்காக தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுஇ ஒன்றிய அரசின் 60 மூ நிதிப்பங்களிப்புடன் செயல்படுத் தப்பட்டு வரும் ‘பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் பழச்சாறு பழக்கூழ் தயாரித்தல் மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய் அரிசி ஆலை ,இட்லி தோசைக்கான மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய் பேக்கரிப் பொருட்கள் இனிப்பு மற்றும் காரவகைத் தின்பண்டங்கள் தயாரித்தல் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் சாம்பார் பொடி இட்லிப்பொடி போன்ற மசால்வகை பொடிகள் தயாரித்தல் மற்றும் காப்பிக் கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் தொழில்நுட்ப ஆலோசனைகள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தொழில் நடத்திடத் தேவையான உரிமங்கள் தரச்சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர்; ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை. திட்டத் தொகையில் 10 மூ முதலீட்டாளர்; பங்காகவும்இ 90மூ வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு 35மூ மானியம்இ அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் வரை வழங்கும். சுயஉதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40000 வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.
தனியான தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மட்டுமன்றி தொகுப்புக் குழுமங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்பு வசதிகள் பொது வசதியாக்க மையங்கள் ஏற்படுத்திட திட்டத் தொகையில் 35மூ மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
தற்பொழுது, இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. உணவுப்பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவவும் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் மேற்கொள்ள அழகி என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள்; பெற மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257 (8925533989) என்ற தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி