விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது 100 சதவீதம் விவசாயம் நடந்து வருகிறது. மேற்படி மதுரை மாவட்டம் வைகை ஆற்றில் இருந்து விரகனூர் அணையில் இருந்து பிரிவு கிருதுமால் நதி மேலே நரிக்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமம் வீரக்குடி பிரிவு நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு நேரடி கால்வாய் இருந்தபோதிலும் இந்த வருடம் வைகை அணையில் இருந்து விவசாயிகளுக்காக இரு முறை தண்ணீர் திறந்து விட்ட போதிலும் நல்லுக்குறிச்சி விவசாய கிராமத்திற்கு உரிய முறையில் தண்ணீர் செல்லாததால் அங்கு உள்ள விவசாயம் அனைத்தும் கருகி மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
காரணம் கால்வாய் மண்ணரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வர முடியாமல் போனதே முக்கிய காரணமாகும் மண் அரிப்பை விவசாயிகள் லட்ச கணக்கில் செலவிட்டு கால்வாயை தூர்வார முயன்றும் விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது ஆகவே கால்வாயை அரசு தலையிட்டு மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இருபுறமும் காங்கிரட் சுவர் அமைத்துக் கொடுத்து நதிநீர் அனைத்து விவசாய கிராம மக்களுக்கும் பகிர்ந்து அளித்து விவசாயி விவசாயிகள் மேற்படி கிராமங்கள் புளியண்டார் கோட்டை, பானக்குறிச்சி, குறைஅறைவாசித்தான், நல்லுக்குறிச்சி ஆகிய (4) கிராம ங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கும் பட்சத்தில் அரசு உரிய இழப்பீடு வழங்குமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.