விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அசோலா கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் ஓடியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம், நிலையூர் கால்வாய் திட்டம் மூலம் காரியாபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நிலை ஒரு கால்வாய் மூலம் வந்த தண்ணீர் ஆனது, குலம் குறண்டி மற்றும் அரசகுலம் கண்மாய்களுக்கு நிரம்பியது . நீண்ட காலமாக அரசகுலம் கண்மாயில் தண்ணீர் நிரம்பினாலும் மறுகால் போகவில்லை சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரசகுலம் கண்மாயில், மறுகால் ஓடியது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை மறுகால் ஓடியதுக்காக தடுப்பணை அருகே சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் மறுகால் ஓடும் இடத்தில் பூத்தூவி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், காரியாபட்டி திமுக செயலாளர் கள் செல்லம் கண்ணன் மாவட்ட க்
கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் குர ண்டி சிவசக்தி, மாங்குளம் மணிவண்ணன், ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளர் குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி