மதுரை : மதுரை மாவட்டம், திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும். இத் திருக்கோயிலில், கடந்த சில ஆண்டுகளாகவே, கோவிலில் உட்புற பகுதிகளில் முட்புதர்கள் பெருமளவில் குப்பை கிடங்குகளாக பராமரிப்பின்றி காணப்படுவதால், அதனுள் விஷமுடைய ஜந்துக்கள் பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷமுடைய ஜந்துகள் நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். அலட்சியப் போக்கில், கோவில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் அன்னதான கூடத்தில் அன்னதானம் உண்ண வரும் பக்தர்களுக்கு, குடிநீர் வழங்குவதில்லை எனவும் , அங்கு கோயிலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரையே சமைத்தும், பக்தர்களுக்கும் அதனையே குடிநீராக வழங்கப்படுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி