திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டம் சார்பில் 5 பேட்டரி வாகனங்கள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. மக்கும் குப்பை,மக்கா குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மைக்கு உதவும் வகையில் குப்பை தொட்டிகளுடன் புதிய மூன்று சக்கர மின்கள வாகனங்களின் சாவிகளை தூய்மை பணியாளர்களுக்கு அளித்து வாகனங்களை கொடியசைத்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,செயல் அலுவலர் வெற்றி அரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு