சிவகங்கை : சிவகங்கை காரைக்குடியில் உள்ள காளீஸ்வரர் கால்பந்து கழகத்தின் சார்பில் 90 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலைமணி நினைவு அணியினரும், ரஜினி செவன்ஸ் பாலையூர் அணியினரும் விளையாடிய இப்போோட்டி ட்ராவில் முடிவடைந்தது இறுதியாக குலுக்கல் முறையில் ரஜினி செவன்ஸ் பாளையூர் அணி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு காரைக்குடி கீழத்தெரு மெய்யப்பன் அம்பலம் நினைவாக 2 கிலோ வெள்ளி சுழல் கோப்பையை அவரது மகன் சண்முகதாஸ் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் கமிட்டி சார்பில் ரூபாய் 2590 ரூபாயை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வழங்கினார். ரன்னராக தேர்வு பெற்ற கலைமணி நினைவு அணியினருக்கு கமிட்டி சார்பில் ரூபாய் 20 ஆயிரத்து 90 ரூபாயும் அமராவதிபுதூர் வேலு கிருஷ்ணன் சார்பாக சுடர் கேடயத்தையும் எம் எல் ஏ மாங்குடி வழங்கினார் மூன்றாவது பரிசை காலிஸ்வரா கால்பந்து கழக அணியினருக்கு கமிட்டியின் சார்பில் ரூபாய்15 ஆயிரத்து 90 ரூபாய் கோப்பையும் வழங்கப்பட்டது நான்காவது பரிசாக கழனிவாசல் தினேஷ் நினைவாக பத்தாயிரத்து தொண்ணூறு ரூபாயும் கோப்பையும் வழங்கப்பட்டது காளீஸ்வரா கால்பந்து கழகத் தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் செயலாளர் ரமேஷ் பாபு நன்றி உரை நிகழ்த்தினார். பொருளாளர் வடிவேலு நகர் மன்ற உறுப்பினர் கார்த்திக் நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் மாவட்ட செயற்குழு சண்முகதாஸ் S.S ரமேஷ் இளைஞர் காங்கிரஸ் அருணா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி