மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மைதானத்தில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை , சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் குலபதி ஶ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த, முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் முனைவர் சஞ்சீவி, அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவர்கள் குழுவாக மல்லர் கம்பம், கராத்தே, சிலம்பம், யோகா, தப்பாட்டம் சாட்டை குச்சி ஆட்டம், உறி அடித்தல் ஆகிய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை உற்சாகத்துடன் செய்து காட்டினர். பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை சமஸ்கிருத துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் தொகுத்து வழங்கினார். கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் நிரேந்தன், யோகா மாஸ்டர் இருளப்பன், விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் மற்றும் விவேகானந்த குருகுல கல்லூரியின் ஒருங்கிணைப் பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் எல்லைராஜா முனைவர் கணேசன் தினகரன் முனைவர் காமாட்சி ஆகியோர் மாணவர்களின் உடற்பயிற்சி திறமையை முன் நின்று ஒருங்கிணைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி