மதுரை : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
கடும் கட்டுப்பாடுகளுடன் காளைகளும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு வாடிவாசல் அருகே உள்ளது. அவரது வீட்டில் காளைகளுக்கு முறைகேடாக டோக்கன் வழங்கப்பட்டு வருவதாக தகவல் பரவியதை அடுத்து, அவரது வீட்டை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை உரிமையாளர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் சுமார் 70 காளைகளுக்கு டோக்கன் அலங்காநல்லூர்
பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜ் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து காளை வளர்ப்போர் கூறும்போது, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் பதிவு மூலம் காளைகளும் மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சி மன்ற த் தலைவர் முறைகேடாக டோக்கன் வழங்குவதாக கூறுவது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்த முறைகளும் நடக்க வாய்ப்பில்லை என்று தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சித்
தலைவர் வீட்டை, காளை உரிமையாளர்கள் முற்றுகையிட்டது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி