விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சுரபி எவர்கிரீன் பஞ்சவாடி அமைப்பு மற்றும் சங்கமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆர்கானிக் பார்ம் அசோசேசியன் சார்பாக 12000 ஆண்டுகள் தொண்மையாக மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வன மரக்கன்றுகள் நடும் விழா காரியாபட்டி அருகே பிசிண்டி கிராமத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள். தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் திருமலை முன்னிலை வகித்தனர். சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் வரவேற்றார். நிகழ்ச்சியில் , அரசமரம், ஆலமரம், வில்லமரம் வன்னிமரம் ஆகிய மரங்களுடன் அசோக மரத்தை நடுமையமாக வைத்து சுற்றுவட்டதில் மற்ற மரங்கள் நட்டுவைக்கப்பட்டது. தெய்வீக தன்மையுடைய மேற்கண்ட மரங்கள் பஞ்சவடி என்ற அமைப்பில் நட்டுவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி