இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பீமாஸ் மஹாலில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் (02.01.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்து தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 20,878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிரிக் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33,330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும் 5661 விவசாயிகளுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமாக தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குதலில் சாதனை படைத்துள்ளோம். இதற்காக அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயிர் கடன் ஆரம்ப காலத்திலேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே
நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும். இதன் மூலம் இடைத்தரகர்களின் ஈடுபாடின்றி
விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதனால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். நமது மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 இலட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 இலட்சம். நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் ஐந்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை நாம் பயிர்கடன் வழங்கியுள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் விதமாக மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25மூ உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை ஒரு வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.01.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களும் சிறப்பாக
செயல்பட்டதன் மூலமே இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குதலில் சாதனை படைத்துள்ளோம். இதே போன்ற செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து
விவசாயிகளுக்கும் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடன், மத்திய காலக்கடன்வழங்கியும். மகளிருக்கு அதிக அளவில் சுய உதவிக்குழு கடன் வழங்கியும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள். தொழில் புரிபவர்கள் ஆகியோர் அனைவரையும் உள்ளடக்கியும் அனைத்து வகை கடன்கள் வழங்கியும், நமது மாவட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்திட இந்த புத்தாண்டில் உறுதி ஏற்று செயல்படுவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.முத்துக்குமார் அவர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திரு.மனோகரன அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குநர் திருமதி.சரஸ்வதி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.தனுஷ்கோடி அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (இராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி