விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் பனை ஓலை பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் நோக்கத்துடன் நபார்டு வங்கி உதவியுடன் காரியாபட்டியில் விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி பொதுமேலாளர் விந்தியா, விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார் .
உதவி பொதுமேலாளர் ராஜசுரேஷ்வரன், அருண்குமார், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆரோக்கிய விக்டர், உமன் என்.ஜி.ஒ செயலாளர் ஜோதிபாலன் ஆகியோர் பங்கேற்றனர் .
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி