விருதுநகர் : இன்று விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருதினை, விருதுநகர் ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி அவர்கள், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.புஷ்பம், தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு மதி. விஜயலெக்ஷ்மி, விழுப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தமிழ்ச்செல்வன், மற்றும் புல்வாய்க்கரை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.யுவராணி, அவர்களுக்கும் விருதினை வழங்கினார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாகவும் மக்கள் சேவையாற்றியமைக்காக விருதினை பெற்ற அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது