மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி, இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஊராட்சி மன்ற த்தலைவர் வேண்டும் என்றே புறக்கணித்ததாக கிராம பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், கிராமத்தில் எவ்வளவோ அடிப்படை வசதிகள் குறித்து பேசவிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்க வேண்டிய ஊராட்சி மன்றத் தலைவர் கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. தற்காலிகமாக துணைத் தலைவர் ஊராட்சி, செயலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான அறிவிப்பு வெளியிடாமல் இருந்ததால் பத்துக்கும் குறைவானவர்களே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது அங்கிருந்தவர்களை வேதனைக்கு உள்ளாகியது. முக்கியமான தீர்மானங்களை கிராம சபை கூட்டம் வாயிலாகத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டதற்கு மதிப்பளிக்காமல், ஊராட்சி மன்றத் தலைவர் கூட்டத்தை புறக்கணித்தது. அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது . இது குறித்து, அங்கிருந்தவர்கள் கூறும்போது :
மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கடந்த கால கிராம சபை கூட்டங்களின் போதும் பொதுமக்களிடம் தகவல் முறையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி