திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் திரு. அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் திரு.வெற்றியரசு, அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கை, குடிநீர் பிரச்சனை, மின்விளக்குகள், மற்றும் 18 வார்டுகளிலும் பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டிய மின்வாரிய அலுவலர் நேரில் சந்திக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு