மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு முகூர்த்தகால் நடப்பட்டு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. புதன் காலை விநாயகர் பூஜையுடன் முதலாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது இன்று காலை சரியாக.8.30 மணியளவில் அருள்மிகு காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் காளியம்மனுக்கு பால் நெய் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது இதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நாராயணபுரம் கிராமத்தினர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி