விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தைப்பூசத் திருநாளுக்காக ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுருகப்பெருமானை மனமார வணங்கி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி