மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2023ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 2022ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியாக 240 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, 2023ம் ஆண்டிற்கான நிர்மலா சீதாராமன் அளித்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ரூபாய் 90 கோடியாக குறைத்து 150 கோடி ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 240 கோடி நிதி ஒதுக்கி ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் வழங்கியது. இந்த ஆண்டு 2023 இல் 90 கோடி குறைக்கப்பட்டுள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இந்த மாற்றுத்திறனாளிக்கான பட்ஜெட்டை வாபஸ் பெற்று மத்தியஅரசு இதை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று ,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 33 ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி