விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியின் 7வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் , தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மன் தேவராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் கௌரி வரவேற்றார். பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் கடமைகள் பற்றி பேசினார். நிகழ்ச்சியில், மாணவர்களின் பல்வேறுவிதமான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டி வெற்றிபெற்றவர்களுக்கும், பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் பரிசுகள் வழங்கினார். மேலும், இவ்விழாவில், எஸ்.பிஎம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி மற்றும் பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன்,செயலாளர் சபரிநாதன்,பள்ளி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி