மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சி. ஐ. டி .யூ. தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக அதன் மதுரை மின் திட்ட தலைவர் திருமுருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதி படி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்,மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என, பொய்யான அறிக்கை அளிப்பதை கைவிட வேண்டும், வாரிய அறிவிப்பின்படி தினக்கூலியாக 380 ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்,ஊதிய உயர்வு வேலைப்பளு ஒப்பந்தத்தில் ஒப்பந்த தொழிலாளியின் கோரிக்கைகளின் சரத்துகளை சேர்த்து ஒப்பந்தம் கண்டிட வேண்டும் குளித்த கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி