விருதுநகர் : விருதுநகர் காரியாபட்டி வட்டாரத்தில், ஊரகப் பணி அனுபவ திட்டத்தில், மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் வானதி,விக்னேஷ்வரி ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், விவசாயிகளின் குறை நிறைகளைக் கண்டறிந்து பயில்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மல்லாங்கிணர் ஊராட்சியில், மாணவி வானதி அங்கக வேளாண்மையில்”மீன் அமிலம்” எவ்வாறு தயார் செய்து உபயோகித்து பயன்பெறலாம் என்பதை விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் மீன் அமிலம் பயன்படுத்தி , இயற்கை விவசாயத்தில் நன்கு மகசூல் கிடைக்கும் என்று கண்டறிந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி