கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 317 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 29 பேருக்கு ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்