மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய ப்பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது .
முன்னதாக , அங்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி மற்றும் குடம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை , வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுரத்தின் மேல் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. இவ்விழாவில், திருமங்கலம், சாத்தங்குடி , கண்டு குளம் , குதிரை சாரி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி