விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான காரணங்கள், மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விரிவாக ஆலோசனை செய்தனர். வரும் பள்ளி பொது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான செயல் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், திருச்சுழி அருகேயுள்ள கே.செட்டிகுளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆய்வகத்தை, ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி