விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அவியூர் அழகியபெருமாள்- கருப்பணசாமி மாசி களரி திருவிழா நடைபெற்றது. விழாவில், அழகியபெருமாள், மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீரவிளையாட்டு கழகத் தலைவர் பி.ஆர்.ராஜேசகர் தொடங்கிவைத்தார். திருச்சி, மதுரை , சிவகங்கை மாவட்டம், நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கொண்டுவரப்பட்டது. காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டது. காளைமாடுகளை அடக்கிய வீரர்களக்கு சைக்கிள், பீரோ, அண்டா பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், ஆர்.டி.ஓ கல்யாணகுமார், தாசில்தார் விஜயலட்சுமி .ஊராட்சி மன்றத் தனலட்சுமி ரவி ,காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில்,கவுன்சிலர் சிதம்பர பாரதி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், உட்பட பலர் கலந்துகொண்டனர்,, கிராம ஏற்பாடுகளை, ஆவியூர் நல திருமால் வகையறா செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி