மதுரை : மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அ.தி.மு கவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என பேசியிருந்தார். இந்நிலையில், வன்முறையில் தூண்டும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயாகுமாரை கைது செய்யக் கோரி, மதுரை சம்மட்டிபுரம் தி.மு.க பகுதி கழக செயலாளர் தவமணி சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் மனு அளித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி