விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேதுபொறியியல் கல்லூரி தி- ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சார்பாக பாரம்பரிய கிராமிய கலாச்சாரம், இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும், சேது பசுமை சங்கமம் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அலுவலர் சீனி மொகைதீன், இணை நிர்வாகிகள் சீனிமுக மது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியாபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர். செந்தில்குமார் வரவேற்றார்.. நிகழ்ச்சியில், வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் சிறுதானிய இயற்கை உணவு கண்காட்சி ,, நாட்டுப்புற கலை பண்பாட்டு , மற்றும் பாரம்பரிய தமிழக விளையாட்டுப் போட்டிகள், தமிழர் கலாச்சார கண்காட்சி ,சுற்றுச்சூழல் விளக்க கண்காட்சி போன்றவை நடைபெற்றது. விழாவில், சென்னை எழுமின் அமைப்பு நிறுவனர் அருள் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் ,சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி, இயற்கை வேளாண்மையாளர் பாமயன் ,எழுமின் இயக்குனர் சுரேஷ் ,மனோகரன் ,பாலகுரு பதஞ்சலி சரவணன் ,டேனியல் வில்சன் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை, பசுமை புரட்சி பற்றி பேசினார்கள்.
மேலும், விழாவில் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் திணை வகைகளை ஊக்குவித்தல் போட்டிகள்மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,பல்லாங்குழி ,தாயம், சடுகுடு போட்டிகள், கயிறு இழுத்தல் ,பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. மேலும், விழாவில் தோப்பூர் ராமர் குழுவினரின் பறையாட்டம் நடந்தது. விழாவில், மணிராஜுக்கு இயற்கை விவசாயி விருதும் ,பாண்டிக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருது, சிவக்குமாருக்கு வேளாண்மை புதுமை விஞ்ஞானி, சுந்தரவேலுக்கு பாரம்பரிய நாட்டு மாடுகள் விருது, பாலமுருகனுக்கு ஆடுவளர்ப்பு விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, முதல்வர் செந்தில்குமார் தலைமையில், துணை முதல்வர் சிவக்குமார் பேராசிரியர்கள் ஜெய சாந்தி லக்ஷ்மண ராஜ் முத்துசாமி மீனாட்சி சுந்தரம் கண்ணதாசன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்