மதுரை : மதுரை, எல்.கே.பி, நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்
ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை, அனுசியா வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் அசோக்குமார் கலந்துகொண்டு உலக தண்ணீர் தினத்தின் நோக்கம், தண்ணீர் சிக்கனம், நீர் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். அனைத்து ஆசிரியர்களும் நீர் சிக்கனம் குறித்து உரை நிகழ்த்தினர். வீணாகி மண்ணில் கிடைக்கின்ற நெகிழி குடுவைகளில் நீர் நிரப்பி பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் கட்டி பறவைகளுக்கு தண்ணீர் வைக்கப்பட்டது. ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் அருவகம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுமதி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சுற்றுச்சூழல் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி