கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில். செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் தயாரிக்கப்பட்ட 10 வகையான உணவுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ. ஆ. ப. இன்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் பொது வேடியப்பன், ஊரக/. நகர்ப்புர வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், மாவட்ட வழங்கல் அலுவலர் பொ. சுகுமார், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்