மதுரை : கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரமாக புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது ஏப்ரல் 2ம் தேதி குருத்தோலை ஞாயிறு தொடங்கி 9ம் தேதி ஈஸ்டர் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் முதல் நாளாகிய குருத்தோலை ஞாயிறு ஏப்ரல் இரண்டாம் தேதி ஆரம்பமாகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடி பவனியாக ஆலயம் வந்தடைந்தனர். அங்கு சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் இரண்டாவது முக்கிய நாளாக புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் இயேசு கிறிஸ்து தனது சீடர்கள் 12 பேருடைய பாதங்களைக் கழுவி முத்தமிடும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஆலயங்களில் உள்ள 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருடைய பாதங்களை பாதிரியார்கள் கழுவி முத்தமிடும் நிகழ்வு எல்லா ஆலயங்களிலும் நடைபெறும் தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு ஈஸ்டர் திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இவ்வாறு சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை துவங்கிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையோடு தவக்காலத்தை நிறைவு செய்கிறார்கள்.
மதுரையில் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆன கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், புதூர் புனித லூர்தன்னை ஆலயம், டவுன்ஹால் ரோடு புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயம், செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் CSI ஆலயங்கள் மற்றும் சபைகள் அனைத்திலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய குருத்தோலை பவணியானது மேலப்பொன்னகரம் ஐந்தாவது தெருவில் உள்ள ஹோலி ஃபேமிலி பள்ளியில் இருந்து ஞாயிறு காலை 7.30 மணிக்கு பவனியாக புறப்பட்டு மேல பொன்னகரம் ஏழாவது தெரு, A.A ரோடு வழியாக ஆலயம் வந்தந்தது. அங்கு தொடர்ந்து சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெறும் மதுரை ஞான ஒளிவு புரத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஆனந்த், சதங்கை இயக்குநர் அருட்தந்தை மரிய மைக்கேல், மற்றும் அருட்தந்தை மணிவளன் ஆகியோர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனியில் பவனியில் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்