சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவிதொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள்
பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து
நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10
பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி
உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/-வீதம் மொத்தம் ரூ.90,000/- மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களையும் 2021-2022-ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்கிட 09 சமுதாய அமைப்புனர்களுக்கு மொத்தம் ரூ.4,00,00-க்கான
ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4,90,000
மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.மணிவண்ணன், உதவி ஆணையர்
(கலால்) திரு.ச.ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) திருமதி
பி.சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி