மதுரை : மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, முருகனுக்கு, பக்தர்களால் பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை, நவகிரக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள், முருகா, முருகா, என கோசமிட்டனர் . இதை எடுத்து, பக்தர்களுக்கு கோவில் ஆன்மீக பக்தர் பேரவையின் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று, மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், பங்குனி உத்திரம் மற்றும் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, சந்தான, சௌபாக்கிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி