மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீமுனியாண்டி, அய்யனார் முத்தாலம்மன் சுவாமி பங்குனி பொங்கல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ முத்தாலம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 1000 க்கும் மேற்பட்ட முளைப்பாரியுடன் நேற்று இரவு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் பக்தர்கள் ஆங்காங்கே நின்று பூஜைகள் செய்து வழிபட்டனர். அம்மன் கோவில் சென்று அடைந்தார். பின்னர், பல்வேறு மலர்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் தீபாதாரணைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீச்சட்டி எடுத்தால், பால்குடம், மற்றும் மாவிளக்கு எடுத்தல், உருண்டு கொடுத்தல், அழகுகுத்துதல், உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த அவர்களுக்கு பூஜை மலர்களும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. முனியாண்டி கோவிலில், 200க்கும் மேற்பட்ட கிடாய் வெட்டப்பட்டை
விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் செயல் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன், தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி