திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை மூலமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரம்ஜான் மாதத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் புனித நோன்பு இருக்கும் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காயிதே மில்லத் அவர்களின் நினைவாக அறக்கட்டளை ஒன்று தொடக்கப்பட்டு அதன் மூலம் பல நல்ல செயல்களை இங்குள்ள இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று புனித நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தோடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு