மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி சந்தை பாலம் அருகில் பொதுமக்களின் கோடைகால தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு ,
பேரூர் செயலாளர் மதன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் விருமப்பராசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன்,வீரமாரி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச் செயலாளர் ரவிசங்கரன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் மகேந்திரன் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட தாகம் தனிக்கும் குளிர பானங்களும் வழங்கினார். இதில், முன்னாள் ஒன்றியச்செயலாளர் ராஜன், காடுபட்டி பாலு, நகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், சரவணபவ, சுரேஷ்,ஜெயராஜ் , வீமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருணாமூர்த்தி நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை, பேரூர் செயலாளர் மதன் செய்திருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி