மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே 5 ஆண்டுகாலமாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவி பணி துவங்கிட சுற்றுலா பயணிகள் கோhpக்கைவிடுத்துள்ளனர். குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும் மற்ற மாதங்களில் சுனைநீரும் கோடைகாலங்களில் வறண்டும் காணப்படும். 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ந்தேதி வரலாறுகாணாதஅளவில் பலத்தமழைபெய்ததால் சிறுமலையின் மேல்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டோடி 60அடிஉயரமுள்ள பெரும்பாறையின் கீழ் விழுந்தால் குற்றாலஅருவிபோல் வடிவம் உருவானது. அன்றிலிருந்து இந்த அருவிவெளி உலகுக்குதெரியதொடங்கியது. அதன்பின் இங்கு மழைக்காலங்களில் தண்ணீர்விழும்நேரங்களில் குளிக்கவரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மதுரைமாவட்டத்தில் மற்றொருகுற்றாலமாய் பேசப்பட்டது. 2001ஆம்ஆண்டு ஊராட்சிஒன்றியவளர்ச்சிநிதி ரூ.20லட்சம்மதிப்பீட்டில் அருவிக்குசெல்லும் சாலைசீரமைக்கப்பட்டு பாலம்கட்டப்பட்டது.
அதேபோல் ரூ.15லட்சம்மதிப்பீட்டில் வனத்துறையின்சார்பாக படிகள் கட்டப்பட்டு அருவியின் முன் தளம் மற்றும் பிடிகம்பிகள் அமைக்கப்பட்டு ஆடைமாற்றும்அறைகள் கட்டப்பட்டது. சுற்றுலாதலமாக்க கோரி அன்று எம் எல் ஏ வாக இருந்தமாணிக்கம் சட்டசபையில் வேண்டுகோள்விடுத்ததையொட்டி 6கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறைமூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு, அடிவாரத்தில் இருந்து அருவிக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக்கற்களும், படிக்கட்டுகளும் கட்டப்பட்டு அருவி முன்பு தடுப்புகம்;பிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு இடையே தடுப்புகம்பிகள், ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டன. அருவிநுழைவுவாயிலில் அலங்காரவளைவுகளுடன் கதவுகள் அமைக்கப்பட்டது. அதன்பின் வனக்குழு மூலம் ரூ.5 குளிப்பதற்கு கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் கடந்த 2018 ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜாபுயலின்போது மீண்டும் அருவிக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்தும், தண்ணீர் விழும் இடத்தில் தரைத்தளங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உருக்குலைந்து போயின. ஆனால் 5ஆண்டுகளாகியும் அதை சீரமைக்கும் முயற்சியில் வனத்துறை முன்வரவில்லை. அதனால் தற்போது கற்கள் பெயர்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் பாதையெல்லாம் தற்போது துhர்ந்துபோய் செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்து மீண்டும் அடர்வனக்காடாகவே மாறிவிட்டது.
மேலும் அருவி நுழைவுவாயில் பகுதியில் பூட்டுபோட்டுபூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால் அருவியை காணவரும் சுற்றுலாபயணிகள் அங்குள்ள ஓடைநீரில் குளித்துவிட்டு செல்கிறார்கள். டுதற்போது கோடைகாலம் ஆரம்பமானதால் அருவி வறண்டு ஓடையிலும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட காப்புகாட்டுக்குள் நுழைபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர். மதுரை மாவட்டத்திலேயே இயற்கையின் கொடையாக சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தண்ணீரில் நோய்களை குணப்படுத்தும் மாமருந்தாகவும் இருந்த அருவி தற்போது சீர்குலைந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாகும். தற்போது கோடைவெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் சிறுமலை பகுதியில் மேகங்கள் திரண்டு வந்து சாறல் மழை பெய்து செல்வது குளுமையை ஏற்படுத்திவருகிறது. எனவே போர்காலஅடிப்படையில் தண்ணீர் அதிகம் இல்லாத காலங்களில் மீண்டும் மராமத்துபணி செய்து துhர்ந்துபோன அருவிக்கு புத்துயிர் கொடுக்கவேண்டும் என்று தமிழகஅரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குட்லாடம்பட்டி எல்.ராஜேந்திரன்(67).- 5ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் அலட்சியபோக்குகாரணமாக அருவிதுhந்துபோய்விட்டது. சுற்றுலா பயணிகள் இன்றளவும் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இயற்கையின் கொடையாக உள்ள அருவியின் பயனை அனுபவிக்க முடியாமல் காட்சிப்பொருளாக்கிவிட்டார்கள். தற்போது கோடைகாலத்தை பயன்படுத்தி இனியாவது அருவியை சீரமைக்கும் பணியை தொடங்க வனத்துறை முன்வரவேண்டும். ஊராட்சிமன்றதுணைத்தலைவர் கதிரவன்.-வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மராமத்துபணி செய்ய போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை அதனால் பணி தொடராமல் இருந்துவருகிறது. ஒருமுறை மாவட்டகலெக்டர், மாவட்டவனஅலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சேதமதிப்பீடு செய்தனர். தமிழகஅரசு ஏழைகளின் குற்றாலமான இந்த அருவி;க்கு கருணை கொண்டு நிதி ஒதுக்கவேண்டும். வனத்துறை அதிகாரி.- இந்த அருவியை சீரமைக்கவேண்டும் என்று மாவட்டவனஅலுவலர் ஆர்வமாக இருக்கிறார். அதனால் மராமத்து பார்ப்பதற்கான திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதிக்காக காத்திருக்கிறோம் நிதி ஒதுக்கீடு வந்ததவுடன் பணி முழுவீச்சில் தொடங்கி ஒரேகட்டத்தில் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி