திருவள்ளூர் : மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறித்ததை கண்டித்து SBI வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம். அதானி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை நீக்குவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு. அவதூறு வழக்கில் 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறித்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் நகர தலைவர் துரைவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிறப்பா அழைப்பாளராக சதா சிவலிங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சம்பத் மகிலா காங்கிரஸ் ஜோதி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு