மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மண்டலம் -3, வார்டு -45,சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் இஸ்லாமிய சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. முடிவுற்ற தார் சாலை பணிகளை (21.4.2023) வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பகுதி கழகச் செயலாளர் உசேன் அவர்களும், வட்ட கழக செயலாளர்கள் ரபீக், முகமது அலி அவர்களும், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளும், சையது அவர்களும் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி