திருவள்ளூர் : திருவள்ளூர், மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியக் கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமை மில் நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நகர கழக செயலாளர் வி.பட்டாபிராமன்,வழக்கறிஞர் மாரி,தேவதானம் நாகராஜ், குணசேகரன், லாரன்ஸ்,ஜெயராமன், தீனதயாளன், வாசுதேவன்,கணேசன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு