திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதாக தி.மு.க அரசை கண்டித்து சி.ஐ.டி.யு வினர் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார், மாநில துணைத்தலைவர் கே.விஜயன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், தொழிலாளர்களின் வேலை நேரத்தில் 12 மணி நேரமாக உயர்த்திய திமுக அரசு வாய் வழி மசோதாவை நிறைவேற்றியுள்ளது அதனை கண்டிக்கின்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிஐடியு வினர் சட்டசபையில் வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன எனவும். அதன் தொடர்ச்சியாக இந்த மீஞ்சூர் பஜார் பகுதியில் எங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார், இதில் மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கதிரவேல் , கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் குமார் , நாலூர் நாகராஜ், உள்ளிட்டு 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு