பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல், தடுத்தல், தீர்வு காணுதல் என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நேற்று 26.04.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் திருவண்ணாமலை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திருவண்ணாமலை, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் – புதுச்சேரி, உமன் என்பவர்மென்ட் ட்ரஸ்ட் திருவண்ணாமலை ஆகியவைகளை ஒருங்கிணைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறைத்தல், தடுத்தல், தீர்வு காணுதல் என்பது பற்றிய பல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறாக குறைத்துஇ விரைந்து தீர்வுகாண வேண்டும் என்பது போன்று பல்வேறு அறிவுறைகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, நீதித்துறை மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.