சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் திருவம்புத்தூர் கிராமம் (26 -4- 2023), மக்கள் தொடர்பு முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு.பா மதுசூதன் ரெட்டி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உயர் திரு. மணிவண்ணன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமின் திட்ட இயக்குனர் முனைவர் ஆ. ரா.சிவராமன், தேவகோட்டை உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் உயர்திரு. பால்துறை அவர்கள், தேவகோட்டை வட்டாட்சியர் மரியாதைக்குரிய செல்வராணி அவர்கள், மற்றும் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மரியாதைக்குரிய கணேசன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மரியாதைக்குரிய பா. செந்தில் குமார் அவர்கள், மற்றும் திருவேகம்பத்தூர் காவல் நிலைய சார்பாக மரியாதைக்குரிய வினோத் அவர்கள் மற்றும் காவல் நிலைய காவல் ஆளிநர்கள் உள்ளனர்.