கீழக்கரை தனியார் பள்ளியில் படித்து.மாணவர்கள் வரும் வேகத்தடையில் நீண்ட காலமா அடையாளம் தெரியாத வேகத்தடைக்கு அடையாளம் கொடுத்த இரு சிறுவர்கள் பெயின் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாகீழக்கரையில் பழைய போலீஸ் ஸ்டேஷன் இருந்து விஏஒ ஆபீஸ் வரை மற்றும் முக்கு ரோடு வரை நான்கு வேகத்தடைக்கு. அடையாளம் செலுத்தி உள்ளார்கள்.
அலைன்ஸ் மக்கள் நல்லிணக்கம் நிறுவனர் ஹபீப்முஹம்மது அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முஹம்மதுஅனஸ் 14.வயதான பத்தாம் வகுப்பு மாணவன். இதற்கு முன்னால் கொரானா காலகட்டத்தில் முகக் கவச விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் . இளைய மகன் ஆதிஃப் இப்ராஹிம் மூன்றாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுவன். இதற்கு முன்னால் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்து வந்தவர்.
பல்வேறு சமூக சேவைகளின் சிறு வயதிலேயே ஈடுபட்டு வந்தவர்கள். இருவரும் இணைந்து சீதக்காதி சாலையில் இருந்து ஏர்வாடி முக்கரோடு செல்லும் வரை நான்கு வேகத்தடைக்கு அடையாளம் பூசம் பணியினை செய்துள்ளனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது வேகத்தடை இருப்பது தெரியாமல், நிலைதடுமாறி விழும் நிலையில் இருந்தது. அப்பகுதிக்கு சென்ற சிறுவர்கள் அதைப் பார்த்து உடனே அதை சரி செய்வதற்கு முன் வந்து அடையாளத்திற்கு வெள்ளை பெயிண்ட் அடித்தார்கள். வேகத்தடைக்கு அடையாளம் காட்டிய இச்சிறுவர்கள் சமூகப் பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். விளையாடும் வயதில் பொறுப்புடனும், பொதுநலத்துடனும் சிறுவர்கள் செயல்பட்டது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது.